ராகி ரொட்டி (2)
0
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 15
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
ராகி மாவுடன் உப்பு, நறுக்கியவைகள், மிளகாய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரில் அடை போல் சற்று கனமாக தட்டி, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.