ராகி தோசை (3)
0
தேவையான பொருட்கள்:
ராகி - 1 கப்
ஓட்ஸ் - 1 கப்
ஜவ்வரிசி - 1/4 கப்
அக்ரூட் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும். அக்ரூட்டை லேசாக வறுத்து தோளை நீக்கி வைக்கவும்.
இப்பொழுது எல்லா பொருளையும் சேர்த்து மிசியில் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து வைக்கவும்.
கடுகு கருவேப்பிலை வெங்காயம் தாளித்து கொட்டி அரை மணி நேரம் கழித்து தோசையாக வார்த்தெடுக்கவும்.