ராகி தோசை (2)
0
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - 1 இனுக்கு
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை:
ராகி மாவுடன் கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் கலந்து தண்ணீர் விட்டு நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசைகளாக வார்க்கவும். காரமான ராகி தோசை ரெடி.