ராகி தோசை
0
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 1 கப்
ராகி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - சிறுத் துண்டு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லி மாவையும் ராகி மாவையும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
கரைத்து வைத்திருக்கும் மாவில் நறுக்கியவற்றை சேர்க்கவும்.
தோசைகல்லை சூடாக்கி தோசை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுகலாக எடுக்கவும். சுவையான ராகி தோசை தயார்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.