ரவை கிச்சடி
தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப்
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
முந்திரிப்பருப்பு (பொடியாக நறுக்கவும்) - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கேரட் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
பீன்ஸ் - 1/4 கப்
பச்சை பட்டாணி - 1/4 கப்
தண்ணீர் - 4 கால் கப்
கொத்தமல்லி தழை (மேலே அலங்கரிக்க) - கொஞ்சம்
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவ
செய்முறை:
வாணலியில் ரவையை லேசாக வறுக்கவும். வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு போட்டு வதக்கி அதனுடன் கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.
பிறகு அதில்வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கியவுடன் பச்சை மிளகாய் இரண்டாக கீறி போட்டு மஞ்சள் தூள் சேர்க்கவும். பிறகு எல்லா வெஜிடபுள்களையும் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.
வெந்ததும் தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதி வந்ததும் தீயை குறைத்து ஒரு கையால் ரவையை தூவிக் கொண்டே மறு கையால் கட்டிபிடிக்காமல் கிளற வேண்டும்.
கடைசியில் நெய் ஊற்றி, கொத்தமல்லி தூவி ஒருகிளறு கிளறி அடுப்பை ஆப் செய்து விட்டு ஐந்து நிமிடம் அப்படியே விடவேண்டும். ஐந்து நிமிடம் கழித்து சூடாக பரிமாறவும்.