ரவா புட்டு
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவா - 1 ஆழாக்கு
தேங்காய்ப்பூ - 1 மூடி
சர்க்கரை - தேவைக்கேற்ப
நெய் - 3 தேக்கரண்டி
வேகவைத்த பச்சைபருப்பு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு ரவையை கொட்டி சிறு தீயில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
ஒரு பேஷனில் கொட்டி அரை கிளாஸ் உப்பு கலந்த தண்ணீரை தெளித்து பிசறி வைக்கவும்.
புட்டுகுழாய் உள்ளவர்கள் ரவையும், தேங்காய்பூவையும் மாற்றி மாற்றி வைத்து வேக வைக்கவும்.
இல்லாதவர்கள் இட்லி தட்டில் ஈரத்துணி போட்டு ரவையை பரப்பி அவிக்கலாம். பின் எடுத்து நெய், தேங்காய்ப்பூ, பச்சைபருப்பு (தேவையானால்) கலந்து பிசறலாம்.