ரவா தோசை (4)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
தக்காளி - 1/2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ரவை, தயிர், உப்பு, பேக்கிங் பவுடர் எல்லாம் சேர்த்து மாவு போல கலந்து வைக்கவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் எல்லாம் பொடியாக நறுக்கி சிறிது உப்பு போட்டு தனியாக கிளறி வைத்து கொள்ளவும்.
10 நிமிடம் கழித்து மாவை தோசைக் கல்லில் சிறிது, சிறிது இடம் விட்டு குட்டி குட்டி தோசைகளாக ஊத்தவும்.
சன்னமாக தேய்க்காமல், ஊத்தப்பம் போல் மொத்தமாக ஊத்தவும்.
ஊத்தியவுடன் மேலே கலவையை சிறிது, சிறிதாக நிரப்பவும்.
சிறிது எண்ணெய் ஊற்றி, கவனமாக திருப்பி போட்டு லேசாக அழுத்தவும்.
நன்றாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.