மைதா ரவா பணியாரம்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 200 கிராம்
சீனி - 100 கிராம்
வாழைப்பழம் - 1
தேங்காய் துருவல் - 1/4 கப்
ரவா - 25 கிராம்
முந்திரி - 8
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த மைதாமாவு, ரவா இரண்டையும் சேர்த்து எடுத்து கலந்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும். அதிகம் அரைத்து விட கூடாது.
அரைத்தவற்றை கலந்து வைத்திருக்கும் ரவா, மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் இந்த கலவையில் வாழைப்பழம், சீனி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்துக் கொள்ளவும். பூவம் பழம், ரஸ்தாளி, அல்லது கற்பூரவள்ளி எந்த வகை வாழைப்பழம் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.
கலந்து வைத்த மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறினால் நன்றாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றவும். இதைப் போல் 5 அல்லது 6 ஊற்றவும்.
திருப்பி விட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விடவும். ரவை சேர்ப்பதால் நன்கு மேலே மொறு மொறு வென்று இருக்கும். அதிகம் எண்ணெய் இழுக்காது.
சுவையான மைதா ரவா பணியாரம் ரெடி.
குறிப்புகள்:
இதை 2 அல்லது 3 நாட்கள் வைத்திருக்கலாம், கெடாமல் இருக்கும்.