மைசூர் மசாலாதோசை

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்

மசாலா செய்ய:

உருளைக்கிழங்கு - 2

பச்சை பட்டாணி - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - 2

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி

சர்க்கரை - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)

இஞ்சி - ஒரு அங்குல துண்டு

பச்சை மிளகாய் - 3

கொத்தமல்லித்தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

சட்னி செய்ய:

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 6

தேங்காய் - கால் மூடி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் இல்லாமல் தேங்காய் தவிர எல்லாவற்றையும் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.

தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து சட்னியாக அரைக்கவும். இந்த வகை தோசையில் உள்ள சட்னி மிகவும் காரமாக இருக்கும். நான் கொடுத்திருப்பது மிதமான காரம் தான். அதிகம் தேவைப்பட்டால் மேலும் மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

மசாலா செய்ய உருளை, பட்டாணியை வேக வைத்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பருப்பு வகைகளை ஊற வைத்து அரைத்து வைக்கவும். மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக அரிந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள பருப்பை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

உருளை, பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லித்தழை தூவி கிளறி வைக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவெடுத்து மெல்லிய தோசையாக வார்க்கவும். தோசை ஓரளவு வெந்ததும் சட்னியை பரவலாக தோசை மேல் தடவி இரண்டு நிமிடம் விட்டு தோசையின் ஒரு பாதியில் மசாலாவை வைத்து மடிக்கவும்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம். அப்படியேயும் சாப்பிடலாம்.