முருங்கைக்கீரை பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

சாதம் - 1 கப்

பச்சை மிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 1

ஆய்ந்த முருங்கைக்கீரை - 1 கப்

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - தேவையான அளவு.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி, உளுந்தை ஊறவைத்து சாதத்துடன் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து கலக்கி லேசாகப் புளிக்க வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கீரையைச் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, பணியாரச் சட்டியில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: