முருங்கைக்கீரை அடை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசிமாவு - ஒரு கப்

முருங்கைக்கீரை - ஒரு கப்

தேங்காய் துருவல் - அரை கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

மிளகாய் வற்றல் - 5

சோம்பு - ஒரு தேக்கரண்டி

கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் மிளகாய் வற்றல் மற்றும் சோம்பு இரண்டையும் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். 15 நிமிடம் கழித்து ஊற வைத்த மாவை எடுத்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும். ஊற வைத்து பிசைந்தால் மாவு பிசைவதற்கு பதமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

பிசைந்த மாவுடன் அரைத்த மிளகாய் சோம்பு பொடி மற்றும் ஆய்ந்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை போட்டு கலந்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

அதன் பிறகு அரிசி மாவுடன் தேங்காய் துருவல் மற்றும் வதக்கிய வெங்காயத்தை போட்டு ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து தோசைக்கல்லில் வைத்து அடைப் போல வட்டமாக தட்டவும். மேலே அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

அடையை ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு பிறகு, ஒரு நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும்.

சூடான அரிசிமாவு கீரை அடை தயார். இதனுடன் கார சட்னி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: