முந்திரி இடியாப்பம்
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் - 3
தேங்காய் பால் - 1/2 கப்
முந்திரி - 12
திராட்சை - 12
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
நெய் - 2 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
செய்முறை:
முந்திரி பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். இடியாப்பத்தை பிழிந்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இடியாப்பத்தை உதிர்த்து விட்டு அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் போட்டு காய்ந்ததும் பட்டை, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி உதிர் உதிராக வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை போட்டு வறுத்த பட்டை, முந்திரி, திராட்சையை பாதியளவு சேர்த்து 3 நிமிடம் பிரட்டி விட்டு இறக்கி விடவும்.
வாணலியிலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறும் போது மீதமுள்ள முந்திரியை மேலே தூவவும்.