முடக்கத்தான் கம்பு தோசை
0
தேவையான பொருட்கள்:
கம்பு - 1/2 கிலோ
முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி
வெந்தயம் - 50 கிராம்
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
கறிவேப்பிலை - 2 கொத்து
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கம்பு, வெந்தயம் இவற்றை நன்றாக கழுவி 3 - 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு கம்பு, வெந்தயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை இவற்றை ஒன்றாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், முடக்கத்தான் கீரை ஆகியவற்றைச் சிறியதாக நறுக்கி போடவும்.
இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து தோசையாக வார்க்கவும்.