மல்லிகை இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி புழுங்கல் அரிசி - 3 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
வெந்தியம் - 1/2 தேக்கரண்டி
சாதம் - 1/2 கப்
அரிசி பொரி - 1/2 கப்
புளித்த கெட்டி தயிர் - 1 கப்
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
அரிசியுடன் வெந்தயம் சேர்த்து ஆறு மணிநேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பு, சாதம் மற்றும் பொரியை தனி தனியாக நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
முதலில் உளுத்தம் பருப்பை வெண்ணெய் பதத்தில் அரைக்கவும். பிறகு அரிசி, சாதம் மற்றும் பொரியை ஒன்றாக அரைக்கவும். கடைசியில் அதனுடன் தயிர் சேர்க்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து பத்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
புளித்த மாவை உப்பு சரிபார்த்துவிட்டு சுலமாக ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் ஊற்றி இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும்.
ஒரு கத்தி அல்லது குச்சியை இட்லியில் நுழைத்து எடுத்தால் ஏதும் ஒட்டாமல் வந்தால் அடுப்பை அணைத்து இட்லி தட்டை வெளியில் எடுத்து ஆறவைக்கவும்.