மரவள்ளி பணியாரம்
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - முக்கால் பாகம்
துருவிய தேங்காய் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய்த்துருவல், மிளகாய், சோம்பு அனைத்தையும் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் துருவிய மரவள்ளிக்கிழங்கு, உப்பு சேர்த்து மேலும் இரண்டு முறை அரைக்கவும்.
அரைத்த மரவள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக் வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவு ஊற்றவும்.
பிறகு தீயை மிதமான அளவில் வைத்து பணியாரங்களை இருப்புறமும் வேக விட்டு எடுக்கவும்.
எளிதில் செய்யக்கூடிய மரவள்ளிக்கிழங்கு பணியாரம் தயார்.