மரவள்ளிக்கிழங்கு தோசை
0
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
புழுங்கல் அரிசி - 1/2 கிலோ
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
பெருங்காயத்தூள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு கரண்டி
எண்ணெய் + நெய் - 1 கப்
செய்முறை:
அரிசியை 3 மணிநேரம் ஊற வைக்கவும். கிழங்கை தோல் எடுத்து சீவிக் கொள்ளவும். இரண்டையும் கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து பட்டுபோல் அரைக்கவும்.
பின் அதை அரைமணி நேரம் வைத்து இருந்து சுற்றிலும் எண்ணெய் ஊற்றி தோசை சுடவும்