மஞ்சள் பூசணி பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய மஞ்சள் பூசணி - 1 கப்

கோதுமை மாவு - 1/2 கப்

வெல்லம் - 1/2 கப்

ஏலக்காய் - 2 பொடித்தது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மஞ்சள் பூசணி மற்றும் வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வேறு பாத்திரத்திற்கு ஊற்றி ஒரு கொதி வந்ததும் அதில் துருவிய பூசணியைப் போட்டு வேக வைக்கவும்.

பூசணி நன்றாக வெந்ததும் கோதுமை மாவையும், உப்பையும் அதனுடன் சேர்க்கவும்.

இவற்றை ஒன்றாக கலந்து பூரிக்கு பிசைவது போல் பிசைந்து கால் மணி நேரம் மூடி வைக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை பூரிகளாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரிகளை பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: