மசித்த இடியாப்பம்
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
உதிர்த்த இடியாப்பம் - 10
முட்டை - 2
ஏலக்காய் - 3
சீனி - 5 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.
முட்டையை நன்கு தனித்தனியாகும்படி கிளறி விடவும்.
பிறகு உதிர்த்த இடியாப்பத்தை முட்டையில் போட்டு கிளறவும்.
அதில் ஏலக்காயை விரலால் அழுத்தி விட்டு போடவும். பின் சீனியை சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக பன்னீர் சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான மசித்த இடியாப்பம் ரெடி.