ப்ரெட் சாண்ட்விச் (1)
தேவையான பொருட்கள்:
காய்கறி ஃபில்லிங்:
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பெரிய அச்சில் துருவிய சிறிய கேரட் - 1
நீளமாக மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸ் - 1/2 கப்
பெரியதாக நறுக்கிய சிறிய பச்சைமிளகாய் - 2
பொடிதாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 சிட்டிகை
கரம் மசாலா - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முட்டை ஃபில்லிங்:
பெரிய வெங்காயம் - 1
மிளகு, சீரகத்தூள் - 1 தேக்கராண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையானவற்றை தயாராக வைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை தாளிக்கவும். பின்னர் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
முட்டைகோஸை சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கிய பிறகு பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். அதில் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும்.
பின்னர் நறுக்கின தக்காளியை சேர்க்கவும். தக்காளியை சேர்க்கும் போது தக்காளியின் விதை பகுதியை நீக்கி விட்டு சதைப்பற்றுள்ள தோலை மட்டும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து இறக்கி வைத்து விடவும்.
இறக்கி வைத்திருக்கும் கலவையில் கொத்தமல்லி தழையை மேலே தூவி கிளறி விடவும். ப்ரெட்டின் உள் வைக்கும் காய்கறி கலவை ரெடி.
முட்டை ஃபில்லிங் செய்ய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் முட்டையை உடைத்து வெங்காய கலவையில் ஊற்றி நன்கு கிளறி விட்டு முட்டை வெந்து உதிர் உதிராக ஆகும் வரை அடுப்பில் வைத்து கிளறி பின்னர் இறக்கவும்.
இப்பொழுது ப்ரெட்டின் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெயை தடவி தவாவில் போட்டு ரோஸ்ட் பண்ணவும்.
அதன் பிறகு ரோஸ்ட் செய்த ப்ரெட்டின் உள் ஃபில்லிங்கை வைத்து சூடாக பரிமாறவும்.