ப்ரெட் உப்புமா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 10

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

மெல்லியதாக நறுக்கிய கேரட் - 1/4 கப்

பச்சை பட்டாணி - சிறிதளவு

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

வறுத்த முந்திரி - சிறிதளவு

எலுமிச்சைச்சாறு - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ப்ரெட்டை சிறிதாக நறுக்கி பின் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பின் தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் போட்டு வதக்கவும். தக்காளி வதங்கியதும் கேரட், பட்டாணி, உப்பு போட்டு வதக்கவும்.

பின் பொடித்த ப்ரெட் தூளை போட்டு சமமாக கிளறவும். நன்கு கிளறியவுடன் இறக்கி கொத்தமல்லி இலை, முந்திரி, எலுமிச்சைச்சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: