ப்ரட் உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரட் ஸ்லைஸ் - 8 (ஓரத்தை வெட்டி மற்றவைகளை சதுரமாக நறுக்கவும்)

வெங்காயம் - 2

தக்காளி - 2

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணைய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கடலைபருப்பு, கறிவேப்பிலை போட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு போடவும்.

பின் சிவப்பு மிளகாய் தூள் போட்டு நன்கு வதக்கி மிளகாய்தூள் வாசம் போனதும் கை அளவு தண்ணீரை தெளித்து ப்ஃரட்டை போட்டு நன்கு பிரட்டவும்.

குறிப்புகள்:

தேவை எனில் புதினா, கொத்தமல்லி தழை சேர்க்கலாம்.