புளி உப்புமா (2)
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 ஆ
புளி - எலுமிச்சங்காயளவு
கடுகு - சிறிது
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிறிது
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
நல்லெண்ணை - 2 அல்லது 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியைக் கோது, மண் இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
புளிக்கரைசலில் அரிசி மாவு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு கரைத்துத் தனியாக் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை விடவும்.
எண்ணை காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் புளிக்கரைசலில் கரைத்த அரிசி மாவைப் போட்டுக் கிளறவும்.
சுருளக் கிளறி ஒட்டாமல் வந்ததும் இறக்கி வைக்கவும்.