புட்டு (2)
0
தேவையான பொருட்கள்:
சிகப்பரிசி மாவு வறுத்தது - 1/2 படி (4 டம்ளர்)
சிறிய தேங்காய் - 1
நெய் - 50 கிராம்
சர்க்கரை - 1/2 கிலோ
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை:
புட்டு மாவை தண்ணீரில் ஒரு பின்ச் உப்பு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசையவும்.
கட்டி பிடிக்காமல் புட்டு விரவும் பதம் என்றால் கையில் பிடித்தால் கொழுக்கட்டை போல் பிடிக்க வரும் விட்டால் உதிர்ந்து விடும். பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
இட்லி பானையில் மெல்லிய ஈர டவலை விரித்து மாவை பரவலாக வைத்து துணியை மூடி இட்லி சட்டியை மூடவும்.
மிதமான தீயில் பதினைந்து நிமிடம் வைக்கவும்.
வெந்ததும் இட்லி பானையில் நல்ல ஆவி போகும் நல்ல வாசனையும் வரும்.
இறக்கி ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நெய்யை உருக்கி ஊற்றி சர்க்கரை சேர்த்து தேங்காய் பூ சேர்த்து கையால் நல்ல பிசையவும் கையால் விரவினால் தான் ருசி.