புட்டு
8 - Ok!
2 நட்சத்திரங்கள் - 8 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
புட்டு மாவு - 500 கிராம்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் பூ - 1/2 கப்
ஏலக்காய் - 1 (அல்லது) 2
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் புட்டு மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசறி வைக்கவும்.
5 நிமிடம் கழித்து ஒரு இட்லி சட்டியில் புட்டு மாவு கலவையை வைத்து வேகவிடவும்.
வெல்லதை பாகு பதத்திற்கு காய்ச்சவும்.
10 நிமிடம் கழித்து புட்டு வெந்ததும் இறக்கி தேங்காய் பூ, பொடித்த ஏலக்காய், நெய், பாகு ஊற்றி கிளறி உருண்டை பிடித்து பரிமாறவும்.