பிரெட் நூடுல்ஸ்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் - 6

வெங்காயம் - 1 பெரியது

பச்சைமிளகாய் - 4

பூண்டு - 4 பல்

கருவேப்பிலை - சிறிது

கடுகு - சிறிது

மசாலா தூள் - 2 தேக்கரண்டி

தக்காளி - 2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரெட்டை ஓரங்களை நீக்கி தண்ணீரில் நனைத்து நன்கு நசுக்கவும்.

இந்த பிசைந்தமாவை இடியாப்ப பரளையில் போட்டு இடியாப்ப தட்டில் பிழிந்து இடியாப்பம் போல ஊற்றவும். இதை 10 நிமிடம் வேகவைக்கவும்.

பின் அடுப்பில் கடாயை வைத்து கடுகு போட்டு வெடித்ததும் கருவேப்பிலை,பூண்டு,பச்சைமிளகாய் போட்டு வதக்கி,பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.பின் தக்காளியை போட்டு நன்கு வதக்கி கடைசியில் நூடுல்ஸை போட்டு கிளறி தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: