பட்டர் நாண்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
ட்ரை ஆக்டிவ் ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
தயிர் - 2 மேஜைக்கரண்டி
நீர் - 2/3 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நீரை வெது வதுப்பாக சூடாக்கி அதில் ஈஸ்ட் கலந்து வைக்கவும். பின் சர்க்கரை கலந்து 5- 10 நிமிடம் வைக்கவும்.
மாவுடன் உப்பு கலந்து பின் தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பாதி வெண்ணெய் கலந்து இதில் ஈஸ்ட் சர்க்கரை கலவை சேர்த்து பிசையவும்.
மாவு சாஃப்ட்டாக இருக்க வேண்டும். இதை மூடி 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை வைத்துவிடவும்.
இப்போது மாவு நன்றாக உப்பி இருக்கும். மீண்டும் மாவை எடுத்து நன்றாக பிசையவும்.
இவற்றை உருண்டைகாளாக ஆக்கி பின் மெல்லிய சப்பாத்தியாக திரட்டவும்.
அலுமினிய தவா அல்லது தோசை கல்லில் இதை இட்டு மூடி விடவும்.
மேலே எழும்பி வந்ததும் உருக்கிய வெண்ணெயை தடவை விட்டு பின் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கவும்.