நாண்
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 400 கிராம்
ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் (மேலே தடவுவதற்கு) - சிறிது
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட்டை கலந்து வைக்கவும். மைதா மாவுடன் ஈஸ்ட், தயிர், ஆலிவ் ஆயில், வெதுவெதுப்பான பால் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் வைத்திருக்கவும்.
2 மணி நேரத்திற்கு பிறகு மாவு மேலே எழும்பி இருக்கும்.
பிறகு மாவை உருட்டி சற்று பெரிய சப்பாத்தி போல போட்டுக் கொள்ளவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் பட்டர் தடவி, அதில் நாணைச் சுட்டு எடுக்கவும். (இருபுறமும் வேகுமளவு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்).
குறிப்புகள்:
விரும்பிய கிரேவியுடன் பரிமாறவும்.