தோசை உப்புமா (2)
0
தேவையான பொருட்கள்:
தோசை - 5
பூண்டு - 2 பல்
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு
தேங்காய் துருவல் (விரும்பினால் மட்டும்) - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீந்து போன தோசையை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்வித்து பின்னர் மிக்ஸியில் பிய்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி பூந்துருவலாக உதிர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பூண்டை நசுக்கி சேர்க்கவும்.
மிளகாய் தூள், உப்பு, பொடித்த தோசை சேர்த்து 2 நிமிடம் கிளறி தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.