தூதுவளை தோசை
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
தூதுவளை இலைகள் - 12
மிளகு - 10
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியைக் களைந்து, அலம்பி மிளகாய், சீரகம், மிளகு, தூதுவளை, உப்பு சேர்த்து பொங்கப் பொங்க அரைத்து எடுத்து வைக்கவும்.
தோசைக் கல்லில் மெல்லிய ஊத்தப்பமாக ஊற்றி வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.