தஹி பூரி (2)
0
தேவையான பொருட்கள்:
சின்ன பூரி - 6
துருவிய கேரட் - 1
தயிர் - 1 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 3 டீஸ்பூன்
முளைகட்டிய பச்சைபயிறு - 100 கிராம்
ஆம்சூர் பவுடர் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பச்சைபயிறு,கேரட், கொத்தமல்லி போட்டு தேவையான அளவு உப்பு போட்டு பின் சாட் பவுடர் , ஆம்சூர் பவுடர் நன்றாக கலக்கவும்.
பின் பூரியின் மேல் பகுதியை உடைத்து, பூரியின் உள்ளே ஸ்டஃப் பண்ணவும்.
பின் தயிரில் உப்பு சேர்த்து நன்றாக அடித்து (பண்ணி) மேலே ஊற்றி பின் சாட் மசாலா தூவி பறிமாறலாம்.