தக்காளி தோசை (1)
தேவையான பொருட்கள்:
புளிக்காத இட்லி மாவு - 1 கப்
தக்காளி - 2
சீரகம் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - கொஞ்சம்
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது - கொஞ்சம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸியில் மிளகு சீரகத்தை போட்டு பொடிக்கவும். பின் இஞ்சியை போட்டு ஒரு சுற்று சுற்றவும். தக்காளியையும் நறுக்கி அவற்றுடன் சேர்த்து அரைக்கவும்.
இட்லி மாவுடன் அரைத்த கலவை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி இரண்டு புறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
இட்லிமாவை அரைத்த உடனே இதற்கு எடுத்து பயன்படுத்தவும்.
இதற்கு சாம்பார், தேங்காய் சட்னி நல்லாவே பொருந்தும். காரம் வேண்டுமென்றால் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.