சோள ரொட்டி பொரியல்
தேவையான பொருட்கள்:
வெள்ளைச் சோளம் - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிறிய வெள்ளைச் சோளத்தில் (பேபி கார்ன்) கொஞ்சம் தண்ணீர் தெளித்து, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் குத்தி உமி நீக்க வேண்டும். அதன் பின் மிக்ஸி அல்லது மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
மாவில் உப்பும், தண்ணீரும் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ரொட்டியாகத் தட்டி சுட்டு எடுக்கவும்.
துவரப் பொரியல்:
துவரம் பருப்பை பதமாக 20 நிமிடம் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்யை காய வைத்து கடுகு, சீரகம், இரண்டையும் தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் பருப்பு விழுதை சேர்த்து இரண்டு தேக்கரண்டி உப்பும் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.