சோள ரவை உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோள ரவை - 2 கப்

தண்ணீர் - 3 கப்

வரமிளகாய் - 2

கடுகு - 1 தேக்கரண்டி

இஞ்சி பொடிதாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் நறுக்கியது - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவைகளை பொடியாக நறுக்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போடவும், கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கி அதில் இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு கிளறவும்.

அதன் பின்பு அதில் சோள ரவையை போட்டு வாசனை வரும் வரை கிளறி தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கிளறி மூடி தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் புழுங்க வைக்கவும். வெந்ததை சரி பார்த்து இறக்கவும்

குறிப்புகள்: