சோயா தோசை
0
தேவையான பொருட்கள்:
சோயா - 2 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சை பருப்பு - 1 கப்
பெருங்காயத்தூள் - 1 சிறிய ஸ்பூன்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
புதினா கீரை - 1 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சோயா, புழுங்கலரிசி, பச்சைபருப்பு, வெந்தயம் அனைத்தையும் தனித்தனியே ஊறவைக்கவும்.
7 அல்லது 8 மணி நேரம் ஊறிய பிறகு, சீரகம், 2 பச்சை மிளகாய், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு தோசைமாவு பதத்திற்கு அரைக்கவும்.
பிறகு மீதி 2 பச்சை மிளகாய், புதினா இரண்டையும் நைசாக நறுக்கி அதில் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தோசையாக சுடவும்.
குறிப்புகள்:
இதற்கு இட்லிப்பொடியோ, சட்னியோ சேர்த்து பரிமாறலாம்.