சேவ் பூரி
0
தேவையான பொருட்கள்:
பானி பூரிக்கு சிறிய பூரி - 25
ஓமப்பொடி - 1 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
சாட் ஐட்டத்திற்குறிய இனிப்பு சட்னி - 5 மேசைக்கரண்டி
சாட் ஐட்டத்திற்குறிய கார சட்னி - 5 மேசைக்கரண்டி
ஆம்சூர் பொடி - 1 மேசைக்கரண்டி
கேரட் துருவல் - 3 மேசைக்கரண்டி
சாட் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பானிப்பூரிக்குறிய பூரி அல்லது மைதாமாவில் செய்த தட்டையான பூரி விரும்பியதை தேர்ந்தெடுக்கவும்.
மசித்த உருளையில் ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பூரியினுள் மசித்த உருளையை நிரப்பவும்.
அதன் மேல் சட்னி வகைகளை வேண்டிய அளவு வைக்கவும்.
அதற்கு மேலாக கேரட் துருவல், ஓமப்பொடி தூவி கடைசியாக 1 பின்ச் சாட் மசாலா தெளித்து உடனே பரிமாறவும்.