சேமியா ரவா இட்லி
0
தேவையான பொருட்கள்:
சேமியா - 100 கிராம்
ரவை - 25 கிராம்
தயிர் - 250 மில்லி லிட்டர்
காரட் - 1 (துருவியது)
குடைமிளகாய் பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது.
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் ரவையையும் தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டும் சூடு குறைந்தவுடன் தயிர், நறுக்கிய காய்கள், உப்பு இவைகளுடன் கலந்து இட்லி மாவு பதத்துடன் 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இட்லி சட்டியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்புகள்:
சூடாக சட்னியுடன் பரிமாறலாம்.