சேமியா மசாலா பொங்கல்
0
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
தண்ணீர் - 3 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான மசாலா பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 2
மல்லி விதை - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 8
பட்டை - 1
இலவங்கம் - 2
ஏலக்காய் - 2
செய்முறை:
பாசிப்பருப்பை வறுத்து சேமியாவுடன் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 ஸ்டீம் வேக விடவும்.
காய்ந்த மிளகாய் மற்றும் மல்லியை லேசாக வறுத்து பொடித்து கொள்ளவும்.
நெய் சூடாக்கி மீதமுள்ள மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து முந்திரி சேர்த்து இறக்கவும்.
வேகவைத்த சேமியாவில் உப்பு மற்றும் திரித்த பொடியை சேர்த்து கிளறவும்.
தாளித்த பொருட்களை சேமியாவில் கொட்டி கிளறி பரிமாறவும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்