சேமியா தயிர் கிச்சடி
தேவையான பொருட்கள்:
சேமியா - 1/4 கிலோ
தயிர் - 1/2 லிட்டர்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
மல்லி இலை (நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை போட்டு மூன்று நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிக்கவும்.
மேலே இரண்டு டம்ளர் குளிந்த நீரை ஊற்றி வடிய விடவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் லேசாக பிரட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி தாளித்து பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சேமியா, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.
பின் தயிர் சேர்த்து கிளறி விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றி மேலே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.