சேமியா கிச்சடி (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 4 பாக்கெட்

பட்டாணி - 100 கிராம்

காரட் - 200 கிராம்

பச்சை மிளகாய் - 25 கிராம்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 100 கிராம்

பூண்டு - 50 கிராம்

இஞ்சி - ஒன்று

கறிவேப்பிலை - 4 கொத்து

டால்டா மற்றும் நெய் - 100 கிராம்

ஏலக்காய் - 50 கிராம்

பட்டை - 50 கிராம்

கிராம்பு - 50 கிராம்

தண்ணீர் - ஒரு லிட்டர்

நல்லெண்ணெய் - 100 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கவும். தக்காளியை நான்கு பாகமாக நறுக்கவும்.

காரட்டை பொடியாக நறுக்கவும். பட்டாணியை நீரில் கழுவி வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து டால்டாவை ஊற்றி, சூடானதும் வெங்காயம், காரட், பச்சை மிளகாய், பூண்டு இவற்றை போட்டு வதக்கவும்.

இவை பதமான பிறகு ஒரு லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றவும். தண்ணீர் கொதித்த பிறகு சேமியாவை பாத்திரத்தில் போடவும்.

சேமியா வெந்து பதமாக இறுகலாக இருக்கும் படி வந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்: