சேமியா கிச்சடி (2)
தேவையான பொருட்கள்:
சேமியா - 2 கப்
வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 1/2 கப்
பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) - 6
பச்சை பட்டாணி - 1/4 கப்
பட்டர் பீன்ஸ் - 1/4 கப்
கேரட் (பொடியாக நறுக்கியது) - 1
பச்சை மிளகாய் (நீளமாக நறுக்கியது) - 2
கறிவேப்பிலை - 2 இனுக்கு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியை காய வைத்து எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கடலை பருப்பு போட்டு சிவப்பாகும் வரை பொருக்கவும்.
பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போடவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து அதனுடன் எல்லா காய்கறிகளையும் சேர்க்கவும்.
உப்பு போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கவும். தேவை எனில் எண்ணைய் சேர்க்கலாம்.
காய்கறிகள் வெந்தபின் ஒரு கப் சேமியாவிற்கு 2 கப் தண்ணீர் என அளவில் ஊற்றி தண்ணீர் கொதிக்கவும் சேமியாவை சேர்த்து வேகவைக்கவும்.
சேமியா வெந்து காய்கறிகளுடன் சேர்ந்ததும் இறக்கி பறிமாறலாம்.