சேமியா கிச்சடி (1)
தேவையான பொருட்கள்:
சேமியா - 2 கப்
காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி - 1 கப்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், சோம்பு, கருவேப்பிலை - தாளிப்பதற்கு
முந்திரி - 10
கொத்தமல்லி - அலங்கரிக்க
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சேமியாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசறி வறுத்து தனியே வைக்கவும்.
முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளி மற்றும் காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
மீதமுள்ள எண்ணெய் சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து பொரிய விடவும்.
பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி தக்காளி சேர்க்கவும்.
தக்காளி நன்று வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து மூடிவைத்து 8 நிமிடம் வேகவிடவும்.
இறக்கி முந்திரி மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.