சேமியா அடை (1)
0
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 டம்ளர்
அரிசி மாவு - 1 டம்ளர்
தயிர் - 1 டம்ளர்
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சேமியாவை சிவக்க வறுத்து, தயிரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை வதக்கி சேமியாவுடன் சேர்க்கவும்.
மிளகாய் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து கெட்டியாக கலக்கவும். சிறு அடைகளாக ஊற்றி சுட்டு எடுக்கவும்.