சுரைக்காய் தோசை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

சுரைக்காய் - 200 கிராம்

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 5 பல்

வரமிளகாய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து மூழ்கும் அளவு நீரில் ஊற வைக்கவும் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்

பிறகு ஊற வைத்த அரிசியையும், சுரைக்காய் (சிறு துண்டுகள் ), இஞ்சி, பூண்டு, வரமிளகாய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸி அல்லது க்ரைண்டரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, கரைத்து வைத்து, குறைந்தது 1 மணி நேரம் புளிக்க விடவும்.

பிறகு தோசையாய் வார்த்து தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

நறுக்கின வெங்காயம், மிளகாய், கொத்தாமல்லி இலை சேர்த்து கலந்து தோசை வார்த்தால் சுவை இன்னும் கூடும்.