சாண்விட்ச் இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 2 கப்

கேரட் துருவல் - 1/4 கப்

பீன்ஸ் - 2 தேக்கரண்டி(பொடியாக அரிந்தது)

பச்சை பட்டாணி - 3 தேக்கரண்டி

நெய் அல்லது எண்ணெய் - 3 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 (பொடியாக அரிந்தது)

கறிவேப்பிலை, மல்லிதழை - சிறிதளவு

கடுகு - 1/4 தேக்கரண்டி

உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பீன்ஸ், கேரட் துருவல், பட்டாணி போட்டு வதக்கி எடுக்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும். பின்பு பச்சை மிளகாய் சேர்த்து மெல்லிய தீயில் கிளறி இறக்கவும்.

இட்லி தட்டில் பாதி குழி நிரம்பும் வகையில் மாவை ஊற்றி, காய்கறி கலவை ஒரு தேக்கரண்டி வைத்து, மேலே மறுபடியும் மாவை ஊற்றி இட்லி குக்கரில் வைத்து வேக வைக்கவும்.

சுவையான சாண்ட்விச் இட்லி ரெடி. குழந்தைகளுக்கு கொடுத்து மகிழுங்கள்.

குறிப்புகள்: