சத்து அடை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி (அல்லது) புழுங்கல் அரிசி- 1 கப்

பாதாம் பருப்பு - 10 எண்ணிக்கை

உளுந்து - 1/4 கப்

துவரம்பருப்பு - 1/4 கப்

கடலைப்பருப்பு - 1/4 கப்

பாசிப்பருப்பு (அல்லது) பாசிப்பயறு - 1/4 கப்

இஞ்சி - 1 சிறிய துண்டு

பெருங்காயம் - சிறிதளவு

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிளகுத்தூள் - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 4 எண்ணிக்கை

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

முருங்கை இலை - 1 கைப்பிடி

பெரியவெங்காயம் - 2

முட்டை (விருப்பமுள்ளவர்கள்) - 1

தேங்காய்த்துருவல் - 1/4 கப்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

அரிசியையும் பருப்பு வகைகைளயும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு மிளகாய்கள், வெங்காயம் இஞ்சி, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொற கொற என்று அறைக்கவும். அதில் முட்டை, முருங்கைக்கீரை, தேங்காய்த்துருவலைச் சேர்த்து நீரில் தோசை மாவுப்பதத்தில் கரைக்க வேண்டும்.

தோசைக்கல்லில் நடுவில் நெய் அல்லது எண்ணை விட்டு அதில் மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மூடி போட்டு வெந்த பின் சுற்றிலும் எண்ணை விட்டு சுட்டு சுட்டு எடுக்கவும் . சூடாகப் பரிமறவும்.

குறிப்புகள்: