கோதுமை இடியாப்பம் (2)
2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 ஆழாக்கு
தேங்காய் - ஒரு மூடி
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1/2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவில் உப்பு போட்டு கொதிக்கும் தண்ணீரை விட்டு கரண்டியால் இடியாப்பக் கட்டையில் பிழியும் அளவிற்கு பிசறிக்கொள்ளவும்.
இட்லிச்சட்டியில் பிழிந்து வேக விட்டு எடுத்து தேங்காய்ப்பூ, சீனி, நெய் போட்டு பிசறவும். கடைந்த மோரில் துளி உப்பு போட்டு இடியாப்பத்தில் பிசறி வைக்கவும்.
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பிசறிய இடியாப்பத்தை போட்டு கிளறி பரிமாறவும்.