கொள்ளு அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1/2 கப்

புழுங்கல் அரிசி - 1/2 கப்

பச்சரிசி - 1/2 கப்

துவரம் பருப்பு - 1/4 கப்

கடலை பருப்பு - 1/4 கப்

பாசி பருப்பு - 1/4 கப்

சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்

கறிவேப்பிலை (நறுக்கியது) - 2 இனுக்கு

மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப

சீரகம் - 1 தேக்கரண்டி

எள் - ருசிக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பு வகைகளை சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். மிகவும் நைசாக இல்லாமல் சற்று கொரகொரப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, சீரகம், எள் ஆகியவற்றை சேர்க்கவும். இப்பொழுது அடையாக வார்க்கலாம். கொள்ளு அடை ரெடி

குறிப்புகள்: