கொத்து சப்பாத்தி (1)
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி ( மிகவும் பொடித்தாக நறுக்கிக் கொள்ளவும்) - 4 என்னம்
பெரிய வெங்காயம் (மிகவும் பொடிதாக நறுக்கியது) - 1 1/2 என்னம்
தக்காளி (மிகவும் பொடிதாக நறுக்கியது) - 1 1/2 என்னம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை (மிகவும் பொடிதாக நறுக்கியது) - 1 இனுக்கு
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
முட்டைகோஸ் (நீளமாக பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
கேரட் (நீளமாக பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
பச்சை (அல்லது) ஃப்ரோஸன் பட்டாணி - 1/4 கப்
தக்காளி சாஸ் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை 1/2 உப்பு சேர்த்து காய்கறி முழுகும் அளவு தண்ணீர் சேர்த்து (அவன் இருந்தால் 3 நிமிடம் வேகவைக்கவும்) வேகவைக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் வதக்கி பின் தக்காளி போடவும்.
நன்றாக வதக்கி பேஸ்ட் போல் ஆகும் போது, சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் , மிளகாய் தூள் ஆகியவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
வேகவைத்த காய்கறிகளை (தண்ணீரை வடித்தபின்) சேர்த்து 1/4 தேக்கரண்டி உப்பு , தக்காளி சாஸ் சேர்க்கவும்.
நறுக்கிய சப்பாத்தியில் தண்ணீரை ( 2 கை அளவு ) தெளித்து எல்லா சப்பாத்தி பீஸீன் மீது படும் படி கலந்து விடவும். ( இது சப்பாத்தி சாப்பிடும் போது மெதுவாக இருக்க உதவும்)
வாணாலியில் உள்ள கலவையிலும் ஒரு கை தண்ணீர் தெளித்து நறுக்கிய சப்பாத்தியை போடவும். உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கி சூடாக பறிமாறவும்.(ஆறினால் நன்றாக இருக்காது).