கேழ்வரகு புட்டு

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1 கப்

தேங்காய் துருவல் - 1/ 2 மூடி

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

சீனி - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேழ்வரகு மாவை சிறிது வறுத்துக் கொள்ளவும்

அதனுடன் உப்பு சேர்த்து கையால் கலந்து கொண்டு தண்ணிரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசறவும்

மாவு முழுவதும் ஈரமாகியிருக்க வேண்டும் ஆனால் கட்டி தட்டக்கூடாது. கட்டி தட்டி விட்டால் இரு கைகளுக்கு இடையே வைத்து தட்டினால் உதிர்ந்துவிடும்

புட்டு குழலில் முதலில் தேங்காய் துருவலை சிறிது போட்டு மாவை அதன் மேல் சிறிது தேங்காய்துருவல் போட்டு அதன் மேல் மாவு போட்டு அதன் மேல் தேங்காய் துருவல் போட்டு மூடி 5 நிமிடம் வேகவைக்கவும்

குழலின் மேல் ஆவி வந்தபின் ஒரு குச்சியால் குத்திப்பார்க்கவும்.மாவு ஒட்டாமல் இருக்கவேண்டும்

புட்டு குழல் இல்லையெனில் இட்லி சட்டியில் மாவையும் தேங்காய்துருவலையும் மாறி மாறி போட்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

ஒரு குச்சியில் குத்திப் பார்த்தால் மாவு குச்சியில் ஒட்டக்கூடாது

வெளியே எடுத்து ஏலக்காய் பொடி, சீனி தூவி பறிமாறவும்.

குறிப்புகள்: