கேழ்வரகு இனிப்பு அடை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1/4 கிலோ

வெல்லம் - 200 கிராம்

துருவிய தேங்காய் - 1 கப்

ஏலக்காய் - 5

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

வெல்லம் கரைந்ததும் அத்துடன் தேங்காய், ஏலப்பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைத்து அத்துடன் கேழ்வரகு மாவை சேர்த்து பிசையவும்.

பிசைந்த மாவை எலுமிச்சைப்பழம் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒவ்வொரு உருண்டைகளாக தட்டிப் போட்டு, வேக வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: